தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 55,000 டன் நிலக்கரி வருகை

 
Thermal plant

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 55-ஆயிரம் டன் நிலக்கரி வந்துள்ளதால் யூனிட்டுகளில் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5-அலகுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 1050-மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் நிலக்கரி தட்டுபாடு காரணமாக 5-யூனிட்களையும் முழுமையாக இயக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.   கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு யூனிட் கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், இதைத்தொடர்ந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனைத்து யூனிட் களும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்ரு காலை அனல் மின் நிலையத்தில் உள்ள 2,3,4,5, ஆகிய நான்கு யூனிட்டுகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில்,  1வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 

coal

இந்நிலையில் நிலக்கரி தட்டுபாட்டினை நிவர்த்தி செய்ய விசாகபட்டினம் பகுதியில் இருந்து 55-ஆயிரம் டன் நிலக்கரி கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இருந்தும் தற்போது வந்துள்ள 55-ஆயிரம் டன் நிலக்கரி என்பது பற்றா குறைதான் இதனை வைத்து 5-யூனிட்களையும் முழுமையாக இயக்க முடியாது என்றும் தற்போது வந்துள்ள நிலக்கரியினை வைத்து ஒரிரு நாட்கள் மட்டுமே இயக்க முடியும் என்றும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.