17 வயது சிறுமியுடன் தலைமறைவான 55 வயது முதியவர்!

 
Police

தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து தலைமறைவாக இருந்த 55 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Cleric Who Escaped After Raping 8-Year-Old Girl In Jharkhand Madrasa  Arrested


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகன் பழனிச்சாமி (55)
என்று முதியவர் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் உறவினர் வீட்டில் சிறுமியை தங்க வைத்துவிட்டு தலைமறைவானார். பழனிச்சாமியை போலீசார் தேடி வந்த நிலையில், பொள்ளாச்சி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஓரு கடையில் பழனிச்சாமி வேலை செய்து வருவதாக தாராபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் பொள்ளாச்சிக்கு விரைந்த போலீசார், பழனிச்சாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.