சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

 
tn

சென்னையில் உரிய உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 55 ஸ்பா மசாஜ் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  அதாவது கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது, 
வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு, பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை, CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. 

seal

இந்நிலையில் சென்னை அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர் . ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை நடத்தினர். சோதனையின் போது சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.