உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் குடும்பத்திற்கு 55 லட்சம் நிதியுதவி- இபிஎஸ்
தஞ்சை அருகே உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் குடும்பத்திற்கு 55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அதிமுக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணி - சி.வி.சண்முகம் அணியாக பிரிந்தது. இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.,க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். இதனிடையே சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாயினர்.
அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகி மகேந்திரனின் குடும்பத்திற்கு குடும்ப நலன் நிதியாக அதிமுக சார்பில் ரூ,30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், உயிரிழந்த மகேந்திரனின் குழந்தைக்கான படிப்பு செலவை கட்சியே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

