ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம்!!

 
metro

ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்தனர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

metro

01.01.2022 முதல் 30.04.2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.06.2022 முதல் 30.06.2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.07.2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 53,17,659 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

metro

மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.2022, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16,11,440 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 32,81,792 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.