இன்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை 50, 674 பேர் எழுதவில்லை - அதிர்ச்சி தகவல்

 
test

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று நடைபெற்ற  12ம் வகுப்பு பொதுத்தேர்வை  50, 674 பேர் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  இதற்காக மாநிலம் முழுவதும்  3,225 மையங்கள் அமைக்கப்பட்டு,  அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. இதில் முதல் 15 நிமிடங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கும்,  வினாத்தாள் வாசிக்கவும் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு விடை எழுத  அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் செல்போன், கணினி எடுத்து செல்ல  தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற  12ம் வகுப்பு பொதுத்தேர்வை 50, 674 பேர் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான். இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.