இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்..

 
இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்..

இந்திய உணவுக் கழகத்தில் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட  காலியாக உள்ள 5,043  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நாடு முழுவதும்   5 மண்டலங்களிலும் இந்திய உணவுக் கழகத்தின் இந்த ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: இந்திய உணவுக் கழகம் (FCI)

மொத்த காலி பணியிடங்கள்: 5,043

பணியிடங்களின் விவரம்:

வடக்கு மண்டலம் ( டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட   மாநிலங்கள் )  -  2,388

தெற்கு மண்டலம் ( தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் )  - 989  

கிழக்கு மண்டலம்  ( பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் ) -  768  

மேற்கு மண்டலம் ( குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் )  -   713  

வடகிழக்கு மண்டலம் (  அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள்  ) -   185  

வேலைவாய்ப்பு

வேலையின் பெயர்  :  இளநிலை பொறியியாளர் சிவில் , எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங், சுருக்கெழுத்தாளர் நிலை- 2 ,  உதவியாளர்  நிலை - 3  பொது,  உதவியாளர் நிலை 3- கணக்கு  ; உதவியாளர் நிலை  3  - டெக்கினிக்கல் ,  உதவியாளர் நிலை 3 - உணவு தானிய கிடங்குகள்,  உதவியாளர் நிலை  3(இந்தி).  

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  :  06 செப்டம்பர் 2022

விண்ணப்பிக்க  கடைசி தேதி  :  05 அக்டோபர் 2020 ( மாலை 4 மணி  வரை )
 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ. 500 /- ,  பட்டியலினத்தவர்கள்,  பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.  

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன் முறை .   விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டலத்தில் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

இளநிலை பொறியியாளர் -  28-க்குள் இருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தாளர் - 25 மிகாமல்  இருக்க வேண்டும்.

உதவியாளர் நிலை 3 -   27-க்கு கீழ் இருக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ளபடி  குறிப்பிட்ட விண்ணப்பதாரகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.  

 கல்வித் தகுதி:    அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க  இருக்க வேண்டும்.  இதர பதவிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  2 கட்டங்களாக நடைபெறும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.   தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.  

மேலும் விவரங்களுக்கு http://www.fci.gov.in என்கிற இணைதள பக்கத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.