பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 50,000 பேர் ஆப்சென்ட்

 
exam

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கின.

exam

கொரோனா பரவலுக்கு பின்னர் முழு கல்வியாண்டாக எந்த ஒரு பாடமும் நீக்கப்படாமல் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ மாணவியர் இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் 3,185 மையங்களும், புதுச்சேரியில் 40 மையங்களும் என் மொத்தம் 3,225 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 8,36,593 மாணவ- மாணவியரில், மாணவர்களின் 4,03,156 பேரும், மாணவிகளின் 4,33,436 பேரும் ஒரு மூன்றாம் பாலினத்தவர், தனித்தேர்வர்கள் 23,747 பேரும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,206 பேரும், சிறைவாசிகள் 90 பேரும் இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 46,870 அசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும், 3,100 நிலையான பறக்கும்படை அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் பிளஸ் டூ தமிழ்ப்பாடத் தேர்வை 51,000 மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை அளித்தது. தற்போது இன்று நடைபெற்ற பிளஸ் 2 ஆங்கிய பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மாணவர்கள் பொதுத்தேர்வை புறக்கணிப்பதாக சொல்லப்படுகிறது.