திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

 
திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக  வேட்பாளரை மாற்ற கோரி எம்.பி.டி.ஆர்.பாலு வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியானது. இதில் டாக்டர் கிருத்திகாதேவி அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்ற  
எஸ்.ஆர்.ராஜாக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என சுமார் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் ஆதாரவாளர்கள் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் உள்ள டி.ஆர்.பாலு வீட்டின் முன்பாக திரண்டனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் சில ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு ழுதும், உங்கள் காலில் கூட விழுகிறேன் மீண்டும் எம்எல்ஏ எஸ்ஆர் ராஜாக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் எஸ்.ஆர். ராஜா நேரடியாக டி.ஆர்.பாலுவை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்புக்குப் பிறகு எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “ராஜா எனக்கு சிறுவயதிலிருந்தே தெரிந்தவர். அவருக்காக நான் முயற்சி செய்தேன். ஆனால் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு காரணங்கள் இருக்கும். அவருக்கு வேறு பொறுப்பு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.