சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 
tn

கன்னியாகுமரிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

tnt

தமிழ்நாட்டில் குட்கா,  பான் மசாலா உள்ள போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா , கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்பட்டு , தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.  இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு எல்லைகளில் காவல்துறையினர் தீவிரமான சோதனை நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் வைக்கோல் கட்டுகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

tn

 இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த ஓட்டுனர் பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் கடத்தி வந்த பொருட்களின் மதிப்பு சுமார் 6 லட்சம் என்று கூறப்படுகிறது. சுமார் 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து குறிப்பிடத்தக்கது.