அதிமுக, அமமுகவை சேர்ந்த 500 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்!

 
dmk

கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 500 பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மாற்று கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைத்து வருகின்றனர். 


இந்த நிலையில், கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 500 பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கடலூர் மேற்கு  மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் நகர முன்னாள் செயலாளர் விடி.கலைச்செல்வன், Ex.M.L.A., பு.தா.இளங்கோவன், Ex.M.P.,  ஆகியோர்  தலைமையில் அதிமுக., அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.