50 லட்சம் தடுப்பூசி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 

50 லட்சம் தடுப்பூசி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

50 லட்சம் தடுப்பூசி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வோரும் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் நேற்று 1600 முகாம்களில் நடந்த 2ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16லட்சத்து 43ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது தமிழக அரசிடம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

50 லட்சம் தடுப்பூசி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கோவிட் டுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,தமிழகத்தில் தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.