பியூட்டி பார்லரில் களைகட்டிய விபச்சார தொழில்- 5 பெண்கள் கைது
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அழகு நிலையம் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர் , சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்களில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில், ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார், அதிரடி சோதனை நடத்தினர் . இதில் ஸ்வஸ்திக் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில், ஐந்து வெளி மாநில இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த அஸ்வதி, பெங்களூருவை சேர்ந்த அனு, சேலத்தை சேர்ந்த சுதா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கமணி, கிருஷ்ணகிரியை சேர்ந்த மதுபாலா ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் அடைத்தனர். மேலும் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளியான கேரளாவை சேர்ந்த மஞ்சு, விடுதி பொறுப்பாளரான ஏற்காடை சேர்ந்த கண்மணி ராஜா மற்றும் 5 ஆண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான மதன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


