4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - 5 தனிப்படைகள் அமைப்பு

 
palladam murder

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் முன்பு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் மது அருந்தியுள்ளனர். இதனை செந்தில் ராஜ் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது செந்தில் ராஜின் தம்பி மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.  வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  பல்லடத்தில் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர், ஈரோடு, நாமக்கல் எஸ்.பி.க்கள் முகாமிட்டுள்ளனர். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து, பல்லடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.