ஆம்ஸ்ட்ராங்கிற்கு 5 முறை ஸ்கெட்ச்...திட்டமிட்டு கொன்றது எப்படி?

 
tt

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

dd

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆற்காடு சுரேஷ் இறந்த நாளிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள சதி திட்டம் தீட்டி வந்ததாகவும்,  ஐந்து முறை கொலை முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  dd

மேலும் புதிய வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ஆம்ஸ்ட்ராங் தினமும் அங்கு வந்து வேலைகளை பார்வையிட்டு சென்றுள்ளார்.  இருமுறையாவது பார்வையிட அங்கு வருவார் என்பதை அறிந்து திட்டமிட்டு கொலை செய்ததை கொலையாளிகள் வாக்குமூலமாக அளித்துள்ளனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் என்று அழைத்தால் வரமாட்டார்கள் என்பதால் ஒரு பிரச்சனை வாருங்கள் எனக் கூறி இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.  கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய மூன்று நபர்களையும் புன்னை பாலுவின் உறவினர் மணிவண்ணன் என்பவர் கொலைக்காக அழைத்து வந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.