சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட்?

 
edappadi sasikala edappadi sasikala

வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட் ஒதுக்க இருப்பதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆதரித்து தென் மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தனது ஆதரவாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

sasikala


2026 சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கி இருக்க மாட்டேன் என இன்று காலை தெரிவித்தார். அதனை தொடர்ந்து தனது இல்லத்தில் முக்கிய சில ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களிடம் போட்டியிடும் தொகுதிகளை கூறி, அந்த தொகுதிகளில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவீர்கள் என்றும், அந்த தொகுதிகளில் வேலைகளை ஆரம்பிக்கவும் கூறியுள்ளார். வரும் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தென்மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வேன். எனது சார்பில் 5 பேருக்கு எம்எல்ஏ சீட் வாங்கி வருகிறேன். அதில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அந்த நபர்கள் குழப்பத்தில் உள்ளனர். எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க போகிறார், அதிமுகவினர் ஆதரவு தெரிவிப்பார்களா என்று குழப்பத்தில் உள்ளனர். 

இதற்கு முன் பல முறை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட சசிகலா தேர்தல் பற்றியும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் எந்த நிர்வாகியிடமும் இதுவரை பேசியதில்லை. முதல் முறையாக தனித்தனியாக அழைத்து தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து உறுதிபட கூறியுள்ளார் என சசிகலா ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.