கடந்த தேர்தலைவிட ஒரு தொகுதி குறைவாக பெற்றது சிபிஎம்!
திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை போலவே 6 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்திவந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலை அடுத்து 5 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களும் இன்று (23-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 (ஐந்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

