5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்… கண்ணீர் சிந்தும் மக்கள்!

5 ரூபாய் மருத்துவர்  திருவேங்கடம் வீரராகவன் காலமானார்… கண்ணீர் சிந்தும் மக்கள்!

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 70.

5 ரூபாய் மருத்துவர்  திருவேங்கடம் வீரராகவன் காலமானார்… கண்ணீர் சிந்தும் மக்கள்!

1973 ஆம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த இவர் ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிலையில் பிறகு அதை ஐந்து ரூபாயாக மாற்றினார். ஆனால் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து தங்கள் பிழைப்பை கேள்விக்குறியாக்குவதாக இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

5 ரூபாய் மருத்துவர்  திருவேங்கடம் வீரராகவன் காலமானார்… கண்ணீர் சிந்தும் மக்கள்!

ஆனால் இதுகுறித்து கூறிய மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் தான் இலவசமாக பெற்ற மருத்துவத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதே இதற்கான காரணம் என்று கூறினார். கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர் திருவேங்கடம் வீரராகவனின் மருத்துவ சேவையை பாராட்டி சிறந்த மனிதருக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

5 ரூபாய் மருத்துவர்  திருவேங்கடம் வீரராகவன் காலமானார்… கண்ணீர் சிந்தும் மக்கள்!

காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை எருக்கஞ்சேரியிலும், மாலை 7. 30 மணியிலிருந்து 9 மணிவரை வியாசர்பாடியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த இவருக்கு வியாசர்பாடியில் இலவசமாக மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு என்று கூறுகின்றனர் அவரது குடும்பத்தினர். மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவு அவரால் பயன் பெற்ற ஏழை எளிய மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது