கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்காத காவல் அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம்

 
கண்ணமங்கலம் காவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனை தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் இன்றி செயல்பட்ட 1 மதுபான கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் தள்ளுவண்டியில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்தவரையும் போலீசார் கைது செய்த்தள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தாலோ அல்லது கள்ள சந்தையில் மது விற்பனை செய்தாலோ அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சவுக்குத் தோப்பில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது எப்படி...? கள ஆய்வு  தகவல்கள்...!


இந்நிலையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள், டாஸ்மாக் மேலாளர், கலால் உதவி ஆணையர் உள்ளிட்ட துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Pudukkottai, Annasaval, police, alcohol, destroyed, | புதுக்கோட்டையில் 1380  லிட்டர் கள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்

கூட்டத்துக்கு பின்னர், திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் கள்ள சாராயம் காய்ச்சுவது, விற்பனை ஆகியவற்றை தடுக்காத குற்றத்திற்காக கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் உட்பட 5 பேரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.