வார இதழின் செய்தியாளரை தாக்கிய 5 பேர் கைது!

 
tn

கனியாமூர் பள்ளிக்கு செய்தி சேகரிக்க சென்ற வார இதழின் செய்தியாளரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

கடந்த ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கன்னியாகுமரி சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அந்த பள்ளி மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த செய்தியை சேகரிக்கவும் , புகைப்படம் எடுக்கவும் சென்னையிலிருந்து வார பத்திரிகையாளர் நக்கீரன் நாளிதழின் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்று புகைப்படம் எடுத்துவிட்டு காரில் திரும்பி வந்துள்ளனர்.

tn

 அப்போது அவர்களை மறித்த  10ற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் அவர்களின் காரை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.  அத்துடன் செய்தியாளர் மற்றும் போட்டோகிராபர் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து பொதுமக்கள் காப்பாற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் வார இதழின் செய்தியாளரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் செய்தி சேகரித்த வார இதழின் செய்தியாளர் பிரகாஷை
தாக்கிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.