விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை விற்பனை செய்த 5 பேர் கைது!

 
arrest

 விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

tn

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் என்பது அதிகரித்துவிட்டது . கஞ்சா,  கள்ளச்சாராயம் என அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு எக்கியார்  குப்பம் மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  செங்கல்பட்டை பொருத்தவரை  கள்ளச்சாராயம் குடித்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் கள்ளச்சாராயத்தை தமிழகத்தில் இருந்து அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

tn

இந்நிலையில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனாலை விற்பனை செய்த இளைய நம்பி உட்பட ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  விழுப்புரத்தை சேர்ந்த இளையநம்பியின் சென்னை ரசாயன ஆலையில் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.