கிணற்றில் மிதந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்! கரூரில் சோகம்
கரூர் மாவட்டம் சின்னகாளிபாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

சின்னகாளிபாளையத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் புடவையால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் குதித்த கணவன் ராமசாமி, அவரது மனைவி ஜானகி, அவரது மகள் சுகுணா, சுகுணாவின் 2 குழந்தைகள் என ஐந்து பேர் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தோட்டத்தில் வழக்கமாக வயதான தம்பதியான ராமசாமி மற்றும் ஜானகி ஆகியோர் விவசாயம் செய்து வந்த நிலையில், திருமணமான மக்கள் சுகுணா தீபாவளிக்காக குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். திருமணமான அப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் குடும்பமே இந்த துயர மு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

