#OPS ஒன்றல்ல.. இரண்டல்ல..5 ஓபிஎஸ்: கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் !
Mar 26, 2024, 15:58 IST1711448890507

வரும் மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம்.
இவர் நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபர் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் நிற்கும் நிலையில் அதே பெயரில் இன்னொரு வரும் வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதே பெயரைக் கொண்ட மேலும் 3 நபர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை வரை இருப்பதால், இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ என்று கலக்கத்தில் உள்ளனர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள்.