உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்..!!
Jun 1, 2026, 10:56 IST1780291592142
தமிழகத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு இன்று ஜூன் 1-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டிற்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் வெங்கிட சுப்பிரமணிய மோகனா, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதி அருண் பல்லி ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை காலை வெளியிட்டது.

