#BREAKING மேலும் 5 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டம்!

 
#BREAKING மேலும் 5 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டம்!

மேலும் 5 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜயின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி சட்டமன்றத்தில் வாக்களித்த சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த மூன்று தொகுதிகளுடன் சேர்த்து ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் சேர்த்து நான்கு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி அணி என இரண்டு அணிகள் இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

இந்நிலையில் 3 எம்.எல்.ஏக்களை தொடர்ந்து மேலும் 5 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேர் ராஜினாமா செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.