மதுரை அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!!
Updated: Aug 3, 2026, 10:08 IST1785731921841
மதுரையில் மேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.
மதுரை மேலூர் அருகே, சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு.
அவர்கள் தவிர 2 பேர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

