இந்தியன் 2 ரிலீஸ் - தியேட்டரில் 5 கிலோ கற்பூரத்தை கொளுத்தியதால் பரபரப்பு!!
'இந்தியன் 2' திரைப்பட ரிலீஸையொட்டி தியேட்டர் வாசலில் 5 கிலோ கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது . லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார் . தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணி அளவில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
#WATCH | புதுச்சேரி: 'இந்தியன் 2' திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்கள்..!
— Sun News (@sunnewstamil) July 12, 2024
கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டதால், கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி… pic.twitter.com/JbqOZhuKvo

இந்நிலையில் புதுச்சேரியில் 'இந்தியன் 2' திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் கமல் ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கொளுத்தினர். இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.