தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
assembly assembly

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கல்வி இயக்குநராக விசாகன் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி இன்னசெண்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் உமா, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் ரத்னா, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.