டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனிடம் 5 மணி நேரமாக நடத்திய விசாரணை நிறைவு ​​​​​​​

 
ச் ச்

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனிடம்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி  நேரமாக நடத்திய விசாரணை நிறைவடைந்தது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யும் மதுபானங்களில் முறைகேடு நடப்பதாக, ஏற்கனவே பதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் தனியார் மதுபான தொழிற்சாலைகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.

அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த டாஸ்மார்க் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஏற்கனவே இரண்டு முறை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஐஏஎஸ் அதிகாரி விசாகனுக்கு சம்மன் அனுப்பி இருந்த அமலாக்கத்துறை இன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை சோதனை நடத்தினர். இதனையடுத்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனை சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் 5 மணி  நேரமாக விசாரணை நடத்தினர்.