தவெக பொதுக்குழு பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைப்பு!

 
Vijay tvk

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், வரும் 28ஆம் தேதி (28.03.2025) அன்று நடைபெற உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.