கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
accident

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் உயிரிழந்தது தெரிய்வந்துள்ளது. காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.