தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  5 தீர்மானங்கள்:-

*தீர்மானம்:- 1* 
நடந்து முடிந்த தேமுதிக உட்கட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டம், மற்றும் கிளை கழக பொறுப்பாளர்களுக்கு இக்கூட்டத்தில் நன்றியினை வெற்றி பெற்றவர்களுக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 

tn

 *தீர்மானம்: 2* 
மக்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்கின்ற நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்கு ஆலைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியினை தேமுதிக வன்மையாக கண்டிப்பதுடன், இம்முயற்சியை உடனடியாக கைவிட்டு பொதுமக்களின் கருத்துக்கேற்ப இப்போதைய நிலைமையே தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று தேமுதிக வற்புறுத்துகிறது.

 *தீர்மானம்:- 3* 
பரந்தூர் விமான நிலைய விரிவாக்குதல் திருச்சி, கோவை, சேலம், விமான நிலைய விரிவாக்குதல் பணியினை பொதுமக்களின் முழுமையான வெளிப்படையான கருத்துக்களை 
கேட்டப்பின்பு அதற்கேற்றவாறு செயல்படுத்த தேமுதிக கேட்டுக்கொள்கிறது.

tn

 *தீர்மானம்:-4* 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவேரா அவர்களின் மறைவிற்கு மாமன்றம் வருத்தம் தெரிவிப்பதோடு, வருகின்ற இடைத்தேர்தலில் தேமுதிக தன்னிலையை நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் அவர்கள் முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கி அவர் எடுக்கும் முடிவிற்கு இக்கூட்டம் முழுமனதாக சம்மதம் தெரிவித்துக்கொள்கிறது.

 *தீர்மானம்:- 5* 
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாளான பிப்ரவரி 12ம் நாள் தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் புதிதாக கொடியேற்றி சிறப்பாக கொண்டாடிட மாவட்ட கழக உறுதிகொள்கிறது. செயலாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திட இக்கூட்டம்  நடைபெற்றது.