தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் - ராமதாஸ் வாழ்த்து

 
pmk

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

central

குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.  அந்த வகையில் வயிற்றுப்போக்கு,  காலரா போன்றவற்றிற்கு தீர்வு காணும் ஓஆர்எஸ் சொல்யூஷன் கண்டுபிடித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு  மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்து வரும் தமிழ்நாட்டைச் சார்ந்த இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த வடிவேல் கோபால்,  மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டை சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

pmk

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகநீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். விருதுபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! பத்மபூஷன் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.