தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடியில் 4வது ரயில் பாதை! மத்திய அரசு ஒப்புதல்

 
ச் ச்

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பில் 4வது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Graphic with text in English stating Honorable Minister for Railways approves 4th Line Project between Tambaram and Chengalpattu costing Rs 757.18 crore for Energy Minerals and Cement Corridor Indian Railways on three-line stretch facing congestion issues proposed fourth line to enhance capacity enable extension of suburban grid up to Chengalpattu promote modal shift from road to rail

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோ மீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பிரதான பாதை ஆகும். மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதிகளான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில், தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை திட்டம் செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.