நாகூர் தர்காவின் 465ஆவது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

 
nagore

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடியானது  சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது.

nagore

அதன்படி இந்தாண்டு 465 கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து  பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியை வரவேற்றனர்.  பின்னர் தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க தர்காவில் உள்ள ஐந்து மினராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது.

nagore

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 13-ஆம் தேதி நாகையில் இருந்து புறப்பட்டு 14ஆம் தேதி அதிகாலை நாகூர் தர்கா வந்தடையும். அதன் பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.