"2026 ஜனவரி மாதத்திற்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
tt

 2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

110 விதியின் கீழ் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

“☛ வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திகிறோம்

☛ அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு திமுக

☛ திமுக அரசு பொறுப்பேற்ற பின், 32,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

mk stalin

☛ கடந்த 3 ஆண்டுகளில் 65,483 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

☛ உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது

☛ 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

☛ 2026 ஜனவரிக்குள் 46,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

☛ ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260 பணியிடங்கள், மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் 3,041 இடங்கள், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6,688 பணியிடங்கள் நிரப்பப்படும்