பவுடர் டப்பாவில் 461 கிராம் தங்கம் பறிமுதல் ; திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!!

 
ttn

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 22.67 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்குரிய இருவரை அவர்கள் பிடித்து விசாரித்ததில் அவர்கள  தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

gold

பவுடர் டப்பாவில் தங்கத்தை மறைத்து அவர்கள் கடத்தி வந்தது சுங்கத்துறை அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவரிடம் ரூபாய் 11.50 லட்சம் மதிப்பிலான 234 கிராம் தங்கமும் , மற்றொருவரிடம் 11.16 லட்சம் மதிப்பிலான 227 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  மொத்தம்  461  கிராம் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



துபாய், சிங்கப்பூர், மஸ்கட் ,ஓமன் போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே  மதுரையை சேர்ந்த தேவேந்திரன் என்ற 45 வயதுடைய ஒருவர் தனது உடலில் 193 கிராம் தங்கத்தை பதுக்கி  வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.40 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.