கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 45 சவரன் நகைகள்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன் விலையைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் கோயமுத்தூரில் மளிகை கடையை நடத்துகிறார். இந்நிலையில் சொந்த ஊரான வெள்ளாளன் விலையில் ஆலய பிரதிஷ்டை விழாவிற்காக கோவையிலிருந்து நேற்று தன் குடும்பத்துடன் வேனில் புறப்பட்டார். வேன் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளம் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் அவரது உடல்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. இன்று இறந்தவர்களின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 50 அடி ஆழ கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி நகைகளை மீட்டுள்ளனர்.


