44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்பு!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவானது நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மொத்தம் 187 நாடுகளை சேர்ந்த 1400 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் செஸ் போட்டிகளில் வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 28 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கின்றனர். இப்போட்டியை நடத்த தமிழக அரசு 92 கோடி ஒதுக்கீடு செய்து 37 ஐஏஎஸ் அதிகாரிகளை போட்டியில் நடத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்ள நியமித்துள்ளது. நான்கு மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் மிகச் சிறப்பாக செய்து நேற்று செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி கோலாகலமாக தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 8 வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கின்றனர். பிரக்யானந்தா, வைஷாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகரன், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 தமிழ்நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.