புதுச்சேரியில் 445 வாக்காளர்கள் 515 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

 
ச்

புதுச்சேரியில் 445 பேர் மொத்தம், 515 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 24-ம் தேதியான நாளை வேட்பு மனு பரிசீலனை நடக்கும். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனு திரும்ப பெறலாம். அன்றைய தினம் இறுதி பட்டியல் வெளியாகும். 


புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று   இறுதி நாள். இதில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம்,
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,  லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம்  உள்ளிட்டோர் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர். முக்கிய தலைவர்களும் முக்கிய கட்சியின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்பாளர் தாக்கல் செய்ததால் நகரப் பகுதியில் படும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அத்துடன் கடைசி நாளான இன்று 326 பேர் 380 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  

இதன் மூலம் 30 தொகுதிகளில் மொத்தம் 445 பேர் 515 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது கடந்த 16ம் தேதி தொடங்கியது. இன்று  23-ம் தேதி  மதியம் 3 வரை தாக்கல் செய்தனர்  மொத்தம் 17 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருப்பதால் 17 இடங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் 24-ம் தேதியான நாளை வேட்பு மனு பரிசீலனை நடக்கும். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனு திரும்ப பெறலாம். அன்றைய தினம் இறுதி பட்டியல் வெளியாகும். வரும் ஏப்ரல் 9-ம் தேதி  தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ல் நடக்கிறது.