திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 11 நாட்களில் ரூ.42.88கோடி உண்டியல் காணிக்கை..

 
திருப்பதி கோவில்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஜனவரி 1 முதல் நேற்று (ஜன11) வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்துள்ளது.

திருமலையில் அருள்பாலிக்கும்  திருப்பதி  ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தைப் போல,  மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  அன்றைய தினம் முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 11 நாட்களில் ரூ.42.88கோடி உண்டியல் காணிக்கை..

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1  முதல் நேற்று ( ஜன11) வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி  கிடைத்திருக்கிறது. இந்த 11 நாட்களில் மட்டும்  7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துச் சென்றுள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி திறக்கப்பட்ட  சொர்க்கவாசல் நேற்று நள்ளிரவு மூடப்பட்டது. இந்த நாட்களில்  2.10 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் 6.5 லட்சம் பேர் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்தனர். மீண்டும் அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.