நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ- 4 வயது சிறுவன் பலி
விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் ஆட்டோ கவிழ்ந்து 4 வயது பள்ளி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் ரோகித் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது தந்தை முருகவேல் தனது மகன் ரோகித்தை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பொழுது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் ரோகித் 4 வயது சிறுவன் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர். அதன் பேரில் ரோகித் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

