படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

 
tn

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளார்.

Death

மதுராந்தகம் அருகே பேருந்துப் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூரில் தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணித்தபோது பேருந்தை முந்திய கன்டெய்னர் லாரி உரசியதில் கீழே விழுந்த மூவரும் உயிரிழந்துள்ளார். 

accident

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 5 பேரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.