மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த வழக்கு - 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
Madurai issue

மதுரையில், தனியார் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில் சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரிக்குள் கடந்த மாதம் 30ம் தேதி அத்துமீறி நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று, காவளாளியை எட்டி உதைத்து தாக்கியதோடு, அங்கு வந்த கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தல்லாகுளம் போலீசார் முத்து நவேஷ், சூர்யா, அருண்பாண்டியன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், அருண் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில்,  போலீசார் தரப்பில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைப்பார்கள் என்பதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை ஏற்ற நீதிபதி, யாருக்கும் ஜாமீன் கிடையாது என அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில் சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான சூர்யா, அருண், அருண்பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.