வெடித்து சிதறிய கல்குவாரி - 4 பேர் உயிரிழப்பு

 
tn tn

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

fire
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே  ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.  பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின.  வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது. 


சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர், போலீசார் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி, 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.