லாரி மீது மோதிய கார் - 4 பேர் பலி

 
tn

தந்தையை செண்ட் ஆப் செய்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அப்துல் ஹமீத் . வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நிலையில் மீண்டும் விடுமுறை முடித்து சவுதிக்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார் .அப்துல் ஹமீதை வழியனுப்புவதற்காக அவரது மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் அவரை வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

death

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றி வந்த லாரியின் பகுதியில் கார் அதிவேகமாக மோதியுள்ளது.  இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சரவணன், அப்துல் ஹமீத் மனைவி ஜெய் பினீஷா, அவரது மகன்கள் மிக்சால், பைசல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். காவல்துறையினர் விபத்தில் சிக்கி இறந்தவர்களுடன் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் உயிருக்கு போராடிய அத்தலை  மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.