இயல்பைவிட 4% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை..

 
Balachandran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும். இந்தியப் பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லாநினோ' என்ற நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாக கணிக்க முடியாது.

rain

வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்கு சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 91 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பதிவாகவில்லை, 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது.
 இயல்பைவிட 4% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை.. பாலச்சந்திரன்
அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பை விட 4%  அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தில் நவ.17 முதல் 23-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை குறைந்தது.  அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பு அளவான 317 முடி.மீட்டரை விட 330.மி.மீ மழை பெய்துள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையான காலத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்யும். கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்..