பொங்கல் பண்டிகை - சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

 
Bus

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை சுமார் நான்கு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இதனையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றன. இந்நிலையில், பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையும் 16,932  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன 

இந்நிலையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பஸ்களில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பொங்கல் சிறப்புப் பஸ்களில் செல்ல இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 2,010 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.