நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி - ஒருவர் கைது

 
s s

திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்து வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

சென்னை பட்டாபிராம் தண்டுரை விவசாயி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (51).பூ வியாபாரியான  இவருக்கு ஹேமலதா(28) என்ற  மகளும், விஜய்(25),அஜய்(23) என்ற இருமகன்கள் உள்ளனர். இதில்  விஜய் மட்டும் ஆறுமுகத்துடன் வீட்டில்  தங்கி ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்விற்கு வெடிக்கப்படும் நாட்டு வெடி  பட்டாசுகள் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகள் திடிரென வெடித்து சிதறியது. பலத்த சத்தத்துடன் வெடித்தததில் வீடு இடிந்து விழுந்தது. மேலும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினரை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயை அனைத்த பின்னர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில்  இரண்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நீண்ட போரட்டத்திற்கு பின்பு உள்ளே இடிபாடுகளில் சிக்கிய  மேலும் இரண்டு உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்து வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை தேடும் பணியில் 2 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன.