4 விசாரணை ஆணையங்களுக்கு ₹11.17கோடி செலவு!
Nov 1, 2023, 09:48 IST1698812305944

தமிழ்நாட்டில் 4 விசாரணை ஆணையங்களுக்காக இதுவரை ரூ. 11.17 கோடி செலவானதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 5.60 கோடி செலவாகியுள்ளது.
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திற்கு ரூ.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2011 பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் ஆணையத்திற்கு ரூ. 82.64 லட்சம் செலவும், ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு இதுவரை ரூ. 2.57 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.